சாமஸ் மேபீல்ட் ஆறு அகலப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று (03) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி,உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் வேலைத்திட்ட முன்மொழிவின்படி ரூபாய் 20 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், சாமஸ் மேபீல்ட் ஆறு அகலப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
