மாவில் உருவாகும் சிற்றுண்டிகள் விலை உயர்வடைந்துள்ளது.
மாவில் தயாரிக்கப்படும் அனைத்துவித சிற்றுண்டிகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்டவை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இடியப்பம் ஒரு ரூபாயாலும் அப்பம் 2 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோதுமை மா கிலோ ஒன்று 17 ரூபாயால் இன்று அதிகரிக்கப்பட்டதையடுத்து, மாவில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளும் இன்று விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சிற்றுண்டி ஓணர்கள் அறிவித்துள்ளனர்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், எதிர்வரும் திங்களன்று நன்றாக ஆராய்ந்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
