இந்திய வீட்டுத் திட்டத்திற்கான உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பயனாளிகளுள் 165 பேருக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்திரி குல்கர்ணி ஆகியோர் நேற்று (28) வழங்கினர்.


இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் நிர்மாணித்த, பண்டாரவளை – பூனாகலை கபரகலை ‘நவோதயபுரம்’ வீடமைப்புத் திட்டக் கையளிப்பு விழாவின்போது இந்தக் காணி உறுதிகளும் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தின, வீடமைப்பு, நிர்மாணத்துறை, நீர்வழங்கல் அமைச்சர் சுஷில் ரணசிங்க, மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், ஊவா மாகாண பிரதம செயலாளர், அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு
