புசல்லாவை கவிதா வட்டம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
புசல்லாவை கவிதா வட்டத்தின் கவிஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்று (27) சிறப்பாக நடைபெற்றது.
அப்போது கவிதை தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன. அமைப்பின் தலைவராக கவிஞர் சந்தனம் சத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஆலோசகர்களாக பத்திரிகையாளர் துரைசாமி நடராஜா, ஒய்வுநிலை அதிபர் ஸி.சந்திரமோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஒன்றுகூடலில் கவிஞர் புசல்லாவை கணபதி, சீலன், சரவணா, லோக கிருஸ்ணகுமார்,கவிஞர் சந்தனம் சத்தியநாதன் ஆகியோர் கவிதை பாடினர். எதிர்காலத் திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
தகவல்: புசல்லாவை டி.பரமேஸ்வரன்
