30 ஆண்டுகாலக் கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் பள்ளேகொடை தமிழ் வித்தியாலய அதிபர் இரா.இராஜதுரை.
மத்துகமை கல்வி வலயத்தின் பள்ளேகொடை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் இராமசாமி இராஜதுரை தனத 30 ஆண்டுகாலக் கல்விப் பணியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றார்.
நினைவுக்கூரத்தக்க சாதனைகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்:
- 1996.08.07: வோகன் தமிழ் வித்தியாலயத்தில் (Vogan T.V) ஓர் ஆசிரியராகத் தனது உன்னதமான கல்விப் பயணத்தைத் தொடங்கினார்.
- 1998: 5ஆம் ஆண்டு வகுப்பு ஆசிரியராகச் சேவையாற்றி, பாடசாலை வரலாற்றிலேயே முதன்முறையாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களைச் சித்திபெறச் செய்து சாதனை படைத்தார்.
- 2007.07.19: அதிபராகப் பொறுப்பேற்று, மாணவர்களின் கல்வி வளர்ச்சி, பாடசாலையின் பௌதிக வள மேம்பாடு, தமிழ் மொழித்தினப் போட்டிகள் மற்றும் தேர்ச்சி மட்டப் போட்டிகளில் எண்ணற்ற வெற்றிகளைக் குவித்தார்.
- 2017: புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்றுத் தந்தமைக்காக வலயக் கல்வி அலுவலகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
- 2018.03.29: பள்ளேகொட தமிழ் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று, அங்கேயும் மாணவர் கல்வியிலும் பௌதிக வளங்களிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கினார்.
அசாத்திய ஆளுமை & நட்பு:
கல்விப் பணியோடு மட்டுமல்லாது, மேடைகளைக் காந்தமாக ஈர்க்கும் மிகச்சிறந்த அறிவிப்பாளராகவும் திகழும் இவரது குரலும் ஆளுமையும் என்றென்றும் தனித்துவமானவை.
அதிபராகவும், சமூக உணர்வுமிக்க நல்ல மனிதராகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் பழகும் ஒரு சிறந்த நண்பராகவும் இவர் எனக்கு அளித்த ஒத்துழைப்புகளும், எமது நட்பின் ஆழமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
வீ. சசிகுமார் (அதிபர்),
மத்துகமை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம்.
