200 ஆண்டுகளாக முகவரி இல்லாமல் மலையக மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்காக அன்றி அடுத்தவர்களுக்காகவும் நாட்டுக்காகவும் 200 ஆண்டுகளாக உழைக்கும் பெருந்தோட்ட மலைஜாதி மக்களுக்கு இன்னமும் முகவரி இல்லையென்று இரத்தினபுரியில் இன்று (25) நடந்த கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்தத் தோட்ட மலைவாழ் மக்களுக்கு முகவரி இல்லையென்று இலங்கை சமாதான பேரவையின் திட்டமுகாமையாளர் திருமதி நிரோஷனி அண்டனி தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் சமூக அந்தஸ்து அடைய வேண்டுமெனில் அவர்கள் பொருளாதார ரீதியாகத் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் திருமதி நிரோஷனி உறைக்குவும் உரக்கவும் தெரிவித்தார்.
எஸ். ஆர் இரவீந்திரன் இரத்தினபுரி
