குயில்வத்தை பகுதியில் ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு சீர்செய்யப்பட்டுப் பாதை ஒரு வழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீதி முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மண்மேடு சரிவு, நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட வீதிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன், கௌசல்யா
