நோட்டன்,காசில்ரீ நீர்த்தேக்கத்தில் 66,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுளளன.
தோட்ட மலைவாழ் சமூகத்தினரிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவு 66,000 மீன் குஞ்சுகள் நேற்று (12) காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்பட்டன.
விடப்பட்ட மீன் குஞ்சுகள் ஆறு மாதங்களுக்குள் சுமார் 1.5 கிலோகிராம் எடையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு வளர்ச்சியடைந்த பின்னர் பிடிக்கப்படும் மீன்கள், தோட்ட மலைவாழ் சமூகத்தினருக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசல்ரி நீர்த்தேக்க மீன்வள சங்கத்தின் நிதியுதவியுடன், உடவளவை மீன் இனப்பெருக்க மையத்திலிருந்து இந்த மீன் குஞ்சுகள் பெறப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் தங்கும் விடுதிகளில் நன்னீர் மீன்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், இந்தத் திட்டம் உள்ளூர் மீனவர்களுக்குக் கூடுதல் வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீனவ சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன், தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மலிவு விலையில் நன்னீர் மீன்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
