கொலம்பியா பேரழிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் வௌியிட்டுள்ள பதிவில், கொலம்பியாவில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இலங்கை ஆழ்ந்த வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் துயரமான சந்தர்ப்பத்தில் கொலம்பிய மக்களுடனும் அந்த நாட்டு அரசாங்கத்துடனும் இலங்கை துணைநிற்கும் எனவும் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியாவின் மேற்குப் பகுதியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
