நோர்வூட் அயர்பி தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர்.
நோர்வூட் அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு 11 பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் எண்மர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மூவர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய நிலையில், குளவிகள் வௌியேறித் தொழிலாளர்கள் மீது சீறியுள்ளன.
கௌசல்யா
