இரதல்லை த.வி.மாணவர்களின் கல்விக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நானுஓயா இரதல்லை தமிழ் வித்தியாலயத்தின் தரம் – 4 மாணவர்களால் ” எங்களால் முடியும் ” என்ற தொனிப்பொருளுடன் கல்விக்கண்காட்சி ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.
வகுப்பாசிரியை வி.எம்.எலிசபெத்தின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், மலையக மண்ணின் முதுசொம் (பாரம்பரிய பரம்பரை சொத்துகள்) காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரையும் கவர்ந்தது.



இதில் நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்,
பெற்றோர்கள்,மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்தக் கண்காட்சியில் எமது முன்னோர் உபயோகித்த வெண்கலப் பாத்திரங்கள்,
பழைய நாணயத் தாள்கள், பழைமையான புத்தகங்கள், மாணவர்களின் கண்கவர் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
பங்குபற்றிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.



