மலையகத் தபால் சேவைகளை வலுப்படுத்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் சுகாதார,வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
மலையகத்தில் சீரான தபால் விநியோகம், புதிய தபால் ஊழியர்கள் நியமனம், தற்போது சேவையிலுள்ள தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்டுணன் செல்வராஜ் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
