இரத்தினபுரி சிவனாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி, இரத்தினபுரி சிவனாலயத்தில் 04 ஆம் திகதி விசேட பூசை வழிபாடு நடைபெற்றது.
இப்பூசை வழிபாட்டினை ஆலய சைவ பரிபாலன மகா சபை ஏற்பாடு செய்திருந்தது.

இதில்,இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள்,இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சைவபரிபாலன சபைத் தலைவர் பொன். சிவாஜி, உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் எழுது பொருள்களை இலவசமாக வர்த்தகர் குகன் வழங்கினார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
