இரத்தினபுரியில் பொல்லால் அடித்து குடும்பஸ்தர் கொலை செய்யப்படட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
இரத்தினபுரி பொலிஸ் பகுதியிலுள்ள எத்தோயா,பட்டகலை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து சந்தேக நபர் அருகில் இருந்த நீண்ட பொல்லொன்றில் தாக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அவரை இரத்தினபுரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது இடை நடுவில் உயிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது
இச்சம்பவத்தில் எத்தோயாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமர் தர்மராஜ்( 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரத்தினபுரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் நிவித்திகலை எரபத்தை தோட்டத்தினைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
