நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சட்டத்துறையினர்,எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்மையில் அவசர அவசரமாக சந்திப்பையும் நடத்தின.
இந்தத் தீர்மானம் இப்போது ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுவதால், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அந்தப் பலத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது!
