அமெரிக்கா ஈரான் சண்டை நிறுத்தம் செய்வதாக அறிவித்ததால் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளன.
அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து இரண்டாவது நாளாக இராணுவத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சரிவைக் கண்டுள்ளன.
செப்டம்பர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 4.9 விகிதம் சரிந்து, கொள்கலனுக்கு 92.02 ஆகக் குறைந்துள்ளது.
ஒக்டோபர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் எண்ணெய் விலை 4.6 விகிதமாக சரிந்து 87.48 ஆகவும், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் விலை 5.6 விகிதம் சரிந்து 84.34 ஆகவும் குறைந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா சுமார் 2 வாரங்களாக ஈரான் மீது தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
தற்போது அமெரிக்கா ஈரான் சண்டை நிறுத்தம் செய்துள்ள போதிலும், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹோர்முஸ் நீரிணை பகுதி பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கியதால், கடந்த வாரம் மசகு எண்ணெய் விலை கொள்கலனுக்கு 102 வரை உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் சாதாரண பெட்ரோலின் சராசரி விலை ஒரு கொள்கலன் 4.11 ஆக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
