லிந்துலை மாவுசலை தோட்டத்தில் மகனால் தாக்கப்பட்டவர் மரணம் அடைந்துள்ளார்.
லிந்துலை மாவுசலை மேற்பிரிவு தோட்டத்தில் கோழிக்கறி விவகாரத்தால் சில நாள்களுக்கு முன்னர் மகனால் தாக்கப்பட்ட தந்தை இன்று (22) காலை நுவரெலியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலு; வாசிக்க: லிந்துலயில் காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லிந்துலை மாவுசலை மேல் பிரிவைச் சேர்ந்த அந்தோணி ராஜா (வயது 65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருந்த மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய மகன் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி லிந்துலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
போலீஸ் விசாரணையின் பின்னர் 20ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு எதிர்வரும் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கௌசல்யா
