ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா இன்று (19) அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் குவாசம் தீவு உட்பட பல முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஈரான் மீது அமெரிக்கா பதிலடிஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: ஈரான் மீது அமெரிக்க அதிரடி: மீண்டும் பதற்றம்
கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகின்றது.
உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பகுதியான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்து, அவ்வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 7 நாட்களாக இரு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றமைக் குறிப்பிட்த்தக்கது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
