தெனியா ஆதார மருத்துவமனைக்கு இந்தியா உதவி வழங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தெனியா ஆதார மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கே ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (13) நடந்த இதற்கான வைபவத்தில் சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்டார்.
மேலும் படிக்க: ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடர்
அனர்த்த சூழலிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசு வழங்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
