பன்விலை செல்வ விநாயகர் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 2026 ஜூலை 5 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 2026 ஜூலை 4 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 4.00 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின. தொடர்ந்து, ஜூலை 5 ஆம் திகதி காலை நித்திய பூஜை, விசேட பூஜைகள் ஆகம முறைப்படி நடைபெறும் யாகசாலை கிரியைகளுடன், காலை 8.57 முதல் 10.21 வரையான சுப முகூர்த்த வேளையில், பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறும்.
இந்நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளாசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் அறநெறிப் பாடசாலை ஆரம்பத்துவைப்பு
