நுவரெலியா கல்வி திணைக்களம் நடத்திய வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி கடந்த 22ஆம் 23ஆம் திகதிகளில் (ஜுன் -2026) நுவரெலியா சினிசிட்டா மைதான உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இதில் பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி பயிலும் மாணவனான
ஆர்.டில்ஸான் (ஜூனியர் வயது பிரிவில்,42-45 எடைப்பிரிவில்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்துப் பாடசாலைக்கும் தனது சொந்த ஊரான பத்தனை மவுண்ட்வர்ணன் தோட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்காக ஒத்துழைப்பு நல்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் வகுப்பு ஆசிரியர்,பெற்றோருக்கும் இந்த மாணவர்களுக்கான குத்துச்சண்டை பயிற்சியை வழங்கிய குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான செபஸ்டியன் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
