வத்துகாமம் வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொசோன் பௌர்ணமி தின புண்ணிய நிகழ்வு (19.06.2026) தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் சகல இன மதத்தவர்களின் பங்கேற்றலுடன் வெகு விமரிசையாக வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
வலயத்தின் சகல பாடசாலைகளையும் சேர்ந்த அதிபர்கள், பிரதேச கல்விச் சமூகத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இரவு பகலாக அயராது உழைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து, இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக முழுமனத்துடன்; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், கல்விசாரா பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும். இனம், மதம் என்ற எந்தவித வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு பங்கேற்றமைக்காக மரியாதைக்குரிய நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி
குணரட்ண தெரிவித்தார்.
பன்விலை ம. நவநீதன்



