இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான ஸ்ரீ இராம பக்தர் குழுவினர் 150 ஆன்மீகப் பயணிகள், நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்திற்கு நேற்று (20.06.2026) மாலை 3.30 மணியளவில் வருகை தந்தனர்.

விசேட பூஜை,வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தையும் பக்திப் பூர்வமாகப் பாடினர்.

தொடர்ந்து, ஆலயத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்,இந்திய பக்தர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவித்தார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா,அண்மையில் இராமாயண ஆய்வுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பாலா வெங்கட் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டது.
நுவரெலியா ஆர.எப்.எம்.சுஹைல்

