எம்பிலிப்பிட்டி ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டி நோனகமை பகுதியிலுள்ள தொழிற்சாலையின் களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயங்களாலும் புகையைச் சுவாசித்ததாலும் 22 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் எம்பிலிப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
