கடந்த சில மாதங்களாக நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
நாளாந்தம் இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பல நூற்றுக்கணக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த பட்டு வருகின்றன.
பல ஆயிரக்கணக்கான பயணிகள், பாடசாலை மாணவர்கள் உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இலங்கையின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நகரம் ஆகும்.
கொள்ளையர்கள் பயணிகள், பாடசாலை மாணவர்கள், உல்லாசப் பயணிகளிடம் இருந்து பணம்,உடைமைகளைக் கொள்ளையிட்டு வருகின்றனர்.
இது குறித்து உடைமைகள் மற்றும் பணத்தை இழந்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள், பாடசாலை மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சி. ரீ. பெருமாள், கௌசல்யா



