சாமிமலை கவரவலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 24 ஆம் திகதி மஸ்கெலியா பொலிசார் 21 வயது 38 வயது உடைய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவிக்கையில், சாமிமலை கவரவலை தோட்டப் பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளையில் கடந்த 21 ஆம் திகதி சுமார் 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை, எரிவாயு வெற்றுச் சிலிண்டர் போன்ற பொருள்கள் களவாடப்பட்டுள்ளன.அதன் பின்னர் கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (25) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள், கௌசல்யா
