தித்துவா புயலினால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட கண்டி பன்விலை – மடுல்கலை – மாவுசா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட திறன் பலகை (Smart Board),கணினி அறை திறப்பு விழா திங்கட்கிழமை (04) நடைபெற்றது.
Foundation of Goodness – நற்குண முன்னேற்ற அமைப்பு – வழங்கிய Smart Board,கணினி அறை திறப்பு விழா பாடசாலை அதிபர் சண். கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் Foundation Of Goodness அமைப்பின் தலைவர் எட்வர்ட் எடின் பிரதம அதிதியாகவும் வத்தேகமை கல்வி வலயத்தின் ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஐ.ஹாசிம் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்






