பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் பலாங்கொடைக்கும் பொகவந்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று 28-04-2026 விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 25 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையிலும் கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பொகவந்தலாவைப்பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
