நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான வேலு யோகராஜ் எதிர்வரும் ஏப்பிறல் 17ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசிற்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் நிர்மாணிப்பதற்கான வரைவை சட்டத்திற்குப் புறம்பாக அனுமதித்த குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டார்.
அவ்வாறு அனுமதி வழங்கியது இலஞ்ச ஊழலாகும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைதானவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கௌசல்யா
