கண்டி பன்விலை மாவுசா தோட்டம் மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக (குடமுழுக்கு) விழா எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.47 அளவில் சிறப்பாக நடைபெறுகிறது.
இதனையொட்டி 4 ஆம் திகதி சனிக்கிழமை, பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
5 ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நண்பகல் பன்னிரண்டு முப்பதுக்கு மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இருபத்து நான்கு நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உள்ளன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
