தோட்டத்தில் பலாக்காய் பறிக்கச் சென்றவரைக் கட்டுத்துப்பாக்கி பதம் பார்த்த சம்பவமொன்று இன்று காலை நோட்டன் பொல்பிட்டி, பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 63 வயதான அஜித்குமார என்பவர் காயமுற்று நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொல்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காட்டு விலங்குகளை வேட்டையாட கட்டப்பட்டிருந்த துப்பாக்கி வெடித்ததால் அஜித்குமாரவுக்குக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் அம்பியுலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கட்டுத் துப்பாக்கியைக் கட்டியவரைக் கண்டுபிடிக்க பொல்பிட்டி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
