கியூஆர் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவராவது கியூஆர் கோட்டை மீறிச் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிப் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
