வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தொனிப் பொருளுக்கமைய உள்ளூராட்சி மன்றங்கள்,
மாகாண சபைகளின் அரச பணிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (10/03/2026) கண்டி அரங்கல பிரதேசத்தில் அரங்கல தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மத்திய மாகாண ஆளுநர் பேராசியர் சரத் அபயகோன் , மெத்தும்பர பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் , உறுப்பினர்கள், மாகாண சபையின் ஆணையாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், அரச நிறுவன தலைவர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






