சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம் தலவாக்கலை பிரதே செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட அக்கரகந்த பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அந்தப் பகுதியில் கடந்த 55 வருடங்களாக இயங்கி வரும் மதுபான சாலையை அங்கிருந்து அகற்றுமாறு கோரி மகளிருடன் பிரதேசத்தில் உள்ள ஆண்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டதோடு பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மதுபான சாலை அமைந்து இருப்பதன் காரணமாக சிறுவர் முதல் பலரும் பாதிக்கப்படுவதாகவும் காலத்துக்குக் காலம் மதுபான சாலை வித்தியாசமான முறையில் புதுப் பொலிவுடன் இயங்கி வருவதால் குடிமகன்கள் அதிகரித்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
பிரதேசத்தில் ஐந்து தோட்டப்பிரிவுகளைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களில் சுமார் 10,000 பேர் வசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கௌசல்யா



