இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பலியாகி மெலும் 78பேர் காயமடைந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதி கடலிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளான தகவல் இன்று (04) காலை கிடைக்கப்பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் மீட்கும் பணியை இலங்கை கடற்படையினரும் விமானப் படையினரும் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும், நீர்மூழ்கி ஒன்று தாக்கியிருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
30 பேர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 101 பேர் இறந்திருக்கலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
