நாடு முழுவதும் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்வனவிற்கு வரிசையில் நின்றால், மீண்டும் கியூஆர் முறை கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வீணான நெருக்கடி உருவாக்கப்பட்டால், மீண்டும் கியூஆர் முறை கொண்டுவரும் நிலை உருவாகும் என்று மின்சக்தி பிரதியமைச்சர் அக்ரம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேலதிக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
