இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமாக விரிவான தெளிவூட்டல்.
இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இலங்கை சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனி தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 180 இற்கு மேற்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த பல ஆண்டுகளாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

