காலியிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பியவர்கள் பயணித்த கார் லக்ஸபான பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மூவர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 அளவில் நோட்டன் லக்சபான பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் காரில் சென்ற நால்வரில் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டனர். பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு மாற்றம் செய்ய பட்டதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
முதற் கட்ட விசாரணையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

