பிரிட்டனில் கார் நிறுத்துமிடத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற 37 வயது இலங்கை நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
32 வயதான நிரோதா என்கின்ற நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்ல என்பவர் கடந்த 2025 ஓகஸ்ட் 21 ஆம் திகதி சவுத் மோர்கன் பகுதியில் கொல்லப்பட்டார்.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சில மாதங்களாக அவரிடமிருந்து பிரிந்து சென்ற திசர வெரல்லகே என்ற அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக நியுஸ்வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தாம் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று அவர் மறுத்தபோதிலும் கடந்த ஜனவரியில் நடந்த வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமானது.
ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கிய நீதவான் டானியல் வில்லியம்ஸ் கூறுகையில், கொடூரமான சுயநலம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
வெரல்லகே விடுதலையாவதற்கு முன்னர் குறைந்த பட்சம் 23 வருடங்களும் ஒன்பது மாதங்களும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
நன்றி – நியுஸ்வயர்
