சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று இன்று பிற்பகல் உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்..
மரணித்தவர் மொறவக்க பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய குணபால என தெரியவந்துள்ளது.
இவருடன் வந்த உறவினர்கள் சிவனடி பாத மலைக்குச் சென்றுள்ளனர் எனவும் மரணித்தவர் சிவனடிபாத மலைக்குச் செல்லும்போது ஊசி மலைப் பகுதியில் வைத்து திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வேளையில் மரணம் அடைந்துள்ளார்.
அவரது உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள அமரர் அறையில் வைக்கப்பட்டது.
உறவினர்கள் வந்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
