தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் இவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
