திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்ங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், உரிய அனுமதியின்றி விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை ப்பிரதிஷ்டை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
