mde
மலைக்குருவி ஆசிரிய பீட உறுப்பினரும் நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய அதிபருமான நவநீதன் அவர்களின் அன்புத் தந்தையார் ஆறுமுகம் மருதமுத்து இன்று (ஜனவரி 31) காலமானார்.
அன்னார் 1942 ஒக்டோபர் முதலாந்திகதி புசல்லாவை அட்டபாகை தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
புசல்லாவை வவுகபிட்டி தோட்டத்தை வசிப்பிடமாகவும் தற்போது பன்விலை – புரான்கும்புறை கிராமத்தில் வசித்தவருமான அமரர் மருதமுத்து இறக்கும்போது அவருக்கு வயது 83.
அன்னாரின் இறுதிக் கிரியை 2026 பெப்ரவரி முதலாந்திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 அளவில் பன்விலையில் நடைபெறும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு மலைக்குருவி ஆசிரியபீடத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
