சிவனடிபாதத்திற்குச் சென்று திரும்பும் வழியில் ஐவரைக் குளவி கொட்டியுள்ளது.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ரத்து அம்பலம் பகுதியில் இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 80 வயது உடைய அச்சல் லோண்டஸ் மற்றும் இலங்கை வஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 60 வயது உடைய காமினி லால் சில்வா,49 வயது உடைய டப்லியூ.சரத் சில்வா,26 வயது உடைய சந்தன குமார, மற்றும் ஹட்டன் கிட்டியேகம பகுதியில் உள்ள 25 வயது உடைய பிரமோத் சஞ்சீவ ஆகியோர் என கூறினார்.
இவர்கள் ஜவரும் சிவனடி பாத மலைக்கு சென்று திரும்பும் போது ரத்து அம்பலம் பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குளவி கொட்டுக்கு இலக்கான ஜவரையும் அழைத்து வந்து அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
