இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாள்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு இந்தியா சென்றுள்ளது.
இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை கண்டி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இ. தொ. காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதொகா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதொகா உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றக்கொடுத்துள்ளார்.
