உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது தடவையாக வெற்றி பெற்றள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற காண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பொபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். சுமாா் நாலரை கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2 கோடியே 16 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்தனர். இதில் முசவேனி 79.9 வீத வாக்குகளைப் பெற்றார்.
1986-இல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி அதிபராகப் பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சியான முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது, பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
யோவேரி முசவேனி (Yoweri Museveni) 986 ஜனவரி 29 ஆம் நாள் முதல் தற்போது வரை உகாண்டாவின் அதிபராகப் பதவிவகித்து வருகிறார்.. யோவேரி முசவேணி உகாண்டாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவி வகிப்பவர் என்ற சாதனைக்குரியவராகிறார். முன்னதாக இடி அமீன் 1971 ஆம் ஆண்டு முதல் 1979 வரை உகாண்டாவின் அதிபராக இருந்தார்.நடந்து முடிந்த தேர்தலில் முசவேனியை எதிர்த்துப் போட்டியிட்ட பொபி வைன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து , தலைநகர் கம்பாலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் பொபி வைன் விடுவிக்கப்பட்டார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக வைனின் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
