Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்குங்கள்!

பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்குங்கள்!

Malaikuruvi December 24, 2025 1 minute read
பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்குங்கள்!

பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்கும் OCI அட்டைகளை வழங்குவதை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாநு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (23) சந்தித்தனர். 

இச்சந்திப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு இலங்கைத் தரப்பினர் தமது நன்றியைத் தெரிவித்தனர். 

இச்சந்திப்பில், இ.தொ.கா இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பின்வரும் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் வரை, அவர்களது அவசரத் தேவையைப் பூர்த்தி செய்யத் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல். 

பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வசிக்கும் இடத்திலிருந்து மாற்று இடங்களுக்கு இடம்பெயரும் போது, அவர்களது தொழில் ரீதியான வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது அறிவித்த ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதைப் போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் அறிமுகப்படுத்தி, பெருந்தோட்ட சமூகத்தினரையும் அதில் உள்வாங்குதல். 

பெருந்தோட்ட சமூகத்தினர் இந்திய வம்சாவளி அந்தஸ்துக்கான OCI (Overseas Citizen of India) அட்டையைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்தல். குறிப்பாக, பிறப்புச் சான்றிதழில் ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையோ அல்லது கண்டியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள வரலாற்று ஆவணங்களையோ ஆதாரமாகக் கொண்டு OCI அட்டையை வழங்குவதை இலகுபடுத்துதல். 

இக்கோரிக்கைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சாதகமான பதிலளிப்பார் என எதிர்பார்ப்பதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

Post navigation

Previous: பண்டிகைக் காலத்திற்காக இன்று முதல் விசேட பஸ் சேவைகள்
Next: நுவரெலியாவில் காலையை அழகாக்கும் மார்கழி பனிப்பொழிவு

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |