இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக அறீவித்துள்ளது.
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று அறிவிம்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கை வந்த கலாநிதி ஜெய்சங்கர் இன்று காலை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பின்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவின் உதவியை அறிவித்தார்.
