வத்தேகம- கபரகலை வீதியைப் புனரமைக்க இந்தியப் பாலம் பொருத்தப்படும் என்று பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரத்தின தெரிவித்தார்.
வீதி தாழிரங்கியதால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள வத்தேகம கபரகல வீதியில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாலத்தை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரத்ன தெரிவித்தார்.
குறிப்பிட்ட வீதியி்ல் பன்விலை கெவும் போக் எனப்படும் பாலம் அமைந்துள்ள பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் வீதி தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக கபரகலை கோமரை பெத்தேகமை பம்பரல்லை போன்ற மக்கள் அதிகமாக வாழும் பிரதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனை சீர் செய்வதற்காகவே இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாலத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்னும் ஒரு வாரத்தில் பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பன்விலை பிரதேசத்திற்கு குடிநீரை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பன்விலை பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்
பன்விலை நிருபர் ம. நவநீதன்
