பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவு ஏற்பட்ட போதிலும், உயிர்ச்சேதம் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
